முஸ்லீம் தமிழர்களை அவமதிக்கும் பேரினவாதப் பயங்கரவாதிகளின் சுவரொட்டிகள்
இனியொரு...
சிறீ லங்கா அரசால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டப்படும் பேரினவாதிகள் முஸ்லீம் தமிழ் மக்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லீம் தமிழர்களை அவமதிக்கும் வகையிலான சுவரோட்டிகளை பேரினவாதிகள் மூஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் சுவர்களில் பதிந்துவருகின்றனர். முஸ்லீம்கள் யூதர்களின் உற்பத்திப் பொருட்களைப் பகிஸ்கரிப்பது போல நாங்கள் நாங்கள் முஸ்லீம்களின் உற்பத்திப் பொருட்களைப் பகிஸ்கரிப்போம் என்பது சுவரோட்டியின் வாசகங்களில் ஒன்று. இலங்கையின் வரலாற்றில் இஸ்ரேலிய தூதரகம் இயங்குவதற்கு ராஜபக்ச அரசே முதல்தடவையாக அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.