
மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் நோலிமிட் நிறுவத்துக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளது . அதை தொடர்ந்து இன்றுசிங்கள பௌத்த பேரினவாதிகள் கோஷங்களை எழுப்பியவாறு குறித்த நிறுவத்தை முற்றுகையிட்டு அதற்குல் நுழைய முற்பட்ட போது பதட்டம் ஏற்பட்டுள்ளது . எனினும் ஆரம்பத்தில் போலிசார் அவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப் படுகிறது .
பின்னதாக முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலரின் தலையீட்டல் ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இலங்கையில் பேரினவாத அரசுகள் ஆட்சியைத் தொடரவேண்டுமானால் சிங்கள மக்களை பேரினவாத நச்சூட்டிப் பாதுகாப்பது அவசியமானதாகும். வட கிழக்குத் தமிழர்களுக்கு எதிரான அழிப்பு நடவடிக்கை கூட இதன் ஒரு பகுதியே.
சிங்கள பௌத்த பேரினவாதிகள் மட்டுமன்றி தமிழ் குறும் தேசிய இயக்கங்களும் கூட ஒடுக்கப்படும் முஸ்லீம்களை நட்புசக்திகளாகக் கருதாமல் அவர்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கொழும்பு சார் பிழைப்புவாத அரசியல் தலைமைகள் பேரினவாத அரசோடு கூட்டுச்சேர்ந்து கொள்வதற்கு தமிழ் விடுதலை இயக்கங்களின் தவறான போக்கு வலுச் சேர்த்தது.
இன்று இலங்கையில் தாம் தனித்துவம் மிக்க தேசிய இனம் என்று உணர ஆரம்பித்திருக்கும் முஸ்லீம்கள் பேரினவாத அரசோடு பிழைப்புவாத அரசியல் நடத்தும் கொழும்பு சார் தலைமைகளை நிராகரித்து ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவின் தலைமையில் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.