உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில், குறித்த பகுதியிலிருந்து பள்ளிவாசலை அப்புறப்படுத்தி, அதனை வேறொரு பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஜயரத்ன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக முத்திரையுடன் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஆக்கிரமிப்புநடவடிக்கை ஊடாகவே அரசு உயிர்வாழ்கிறது. இலங்கை அரசு முஸ்லீம் தமிழ்த் தேசிய இனத்தின் மீது தனது பாசிச ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளைமைக்கு எதிராக அனைவரும் குரல்கொடுக்க வேண்டும்.