இந்த முறை ரமழான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம் பிரதேசங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் புனித ரமழான் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் கிறீஸ்பூதம் என்ற அச்சுறுத்தலும் ஏற்பட்டது.
இதேபோல கடந்த காலங்களில் முஸ்லிம்கள் தமது மத அனுஸ்டானங்களை மேற்கொள்ள முடியாமல், பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த முறை அவ்வாறான பிரச்சினைகள் எவையும் ஏற்படாத வகையில், முஸ்லிம்களின் பிரதேசங்களில் அதிக பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பொது மக்களுக்கு இடையூராக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசால் ஏவிவிடப்பட்ட கிரீஸ் பூதம் குறித்து சர்வாதிகாரி கோதாபய இப்போது குறிப்பிடுவது பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.