Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முஸ்லிம் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பௌத்த துறவி கோட்டாபய குண்டர்களால் தாக்கப்பட்டார்

Vajitha derarமுஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும், ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவருமாகிய வட்டரக்க விஜித தேரர் அவர்கள், கடத்தப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு மிக மோசமாகத் தாக்கப்பட்டு, கொண்டுவந்து வீசியெறியப்பட்ட நிலையில் பாணந்துறை, ஹிரண பாலத்துக்கருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அவரது அடையாள அட்டையும் அவருக்கருகில் போடப்பட்டிருந்ததால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேரரால், தற்போதைக்கு வாக்குமூலம் எதுவும் தர இயலாத நிலை இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் பொதுபலசேனா இயக்கத்தினால் இவர் அச்சுருத்தலுக்கும், மிரட்டல்களுக்கும் ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் இணைந்து இலங்கை அரசிற்கு எதிராகச் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இஸ்லாமியத் தமிழ்த் தேசிய இனம் முன்னெடுப்பதைத் தவிர அவர்கள் முன்னால் வேறு வழிகள் இல்லை.

Exit mobile version