Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறத் தீர்மானம் : வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் தீர்மானம்?

hakeemஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே தினத்தின் பின்னர் ஆளும் கட்சியில் நீடிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட உள்ளது. முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகள் குறித்து முஸ்லிம்க காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் இதுவரையில் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே தொடர்ந்தும் ஆளும் கட்சியில் நீடிப்பதா, இல்லையா என்பதனை விரைவில் தீர்மானிக்க நேரிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களின் மேட்டுக்குடி சந்தர்ப்பவாதக் கட்சியான முஸ்லிம்காங்கிரசின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவிற்கு முன்வந்துள்ளனர். பொதுபல சேனா என்ற ராஜபக்ச குடும்பத்தினதும் அன்னிய சக்திகளதும் ஆதரவில் இயங்கும் பௌத்த நாசி அடிப்படைவாத அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக இனச்சுத்திகரிப்பைத் திட்டமிடும் நிலையில் முஸ்லிம் காங்கிரசிற்கு அரசை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

Exit mobile version