Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது

கிழக்கு மாகணாசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் ஆளும் கட்சி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுப் பதவிகள், கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்ற போனஸ் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்குதல், ஒரு அமைச்சர் பதவி, ஒரு பிரதி அமைச்சர் பதவி அல்லது மூன்று பிரதி அமைச்சர் பதவிகள் ஆகியவற்றை வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான சில விடயங்கள் குறித்தும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற் பரிந்துரை செய்துள்ளது. இந்த நிபந்தனைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்து முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் சில உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

Exit mobile version