குஜராத் மானில முதல்வரான மோடியின் ஆட்சியைப் புகழ்ந்து இந்தியா ருடே உட்பட பல சஞ்சிகைகள் தலையங்கம் தீட்டியுள்ளன. மோடியின் ஆட்சியில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. நள்ளிரவு கடந்த வேளையில் பெண்கள் தனியாகத் தெருக்களில் செல்லலாம் என்கின்றனர். பாசிச ஆட்சி நடைபெற்ற எந்த ஒவ்வொரு நாட்டிலும் திருடர்கள் பயம் இருப்பதில்லை.
திருட்டு வேலைகள் அனைத்தையும் ஆளும் வர்க்கம் கையகப்படுத்துவதால் சிறிய திருடர்கள் அழிக்கப்பட்டுவிடுவார்கள். அபிவிருத்தி என்ற தலையங்த்தில் தெருக்களும் கட்டிடங்களும் வறிய மக்களின் குடியிருப்புக்களை ஆக்கிரமித்துக்கொள்ளும். எதிர்ப்பவர்கள் அழிக்கப்படுவார்கள்.
குஜராத்தில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தது தவறு என்பதைக் கூட ஏற்க மறுக்கும் மோடி, தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்தியப் பிரதமாரக வாய்ப்புள்ள இந்து பயங்கரவாதி மோடி தப்பிச் செல்லும் நேர்காணல் கீழே: