முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல்
முஸ்லிம்களை முறையாக வழிநடத்தி வரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது நாட்டையும் சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்துவதாக அமையும்.
பயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை தொடர்பு படுத்தி பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், உமா சபை தேசிய பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது..
ராஜபக்ச குடும்பத்தால் திட்டமிட்டு வளர்க்கப்படும் பயங்கரவாத நாஸி அமைப்பான பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் அரசியல் தீனிபோட்டு வளர்க்கிறது. ஏகாதிபத்தியங்கள் தமது நலனுக்காக மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி மோதலை ஏற்படுத்தியதன் விளைவே இன்று பெருந்தேசிய ஒடுக்குமுறையாகவும் இனப்படுகொலையாகவும் நிறைவேறுகிறது. மத்திய கிழக்கில் அமரிக்க ஆதரவு நாடான சௌதி அரேபியாவின் நிதி வழங்கலில் இயங்கும் பல்வேறு இஸ்லாமிய அடிப்படை வாதக் குழுக்களும் சிங்கள பௌத்த பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவும் மக்களின் விரோதிகளே.
முஸ்லிம்கள் இந்த இரண்டு வகையான மக்கள் விரோத அமைப்புக்களுக்கும் எதிராகக் குரல்கொடுப்பதன் ஊடாகவே தமது விடுதலையை நோக்கிய பயணத்தைத் தொடரமுடியும்.