Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முள் மேல் விழுந்த துணி கிழியாமல் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்- கருணாநிதி.

திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டு நிறைவானதை ஒட்டி நேற்று நேர்காணல் ஒன்றை அளித்த கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கை, இலக்கியச் சேவை, கலைச்சேவை, மக்கள் சேவை, இலங்கை அரசுக்காக உழைத்துக் கொண்டிருப்பது, கிரிக்கெட் ஆர்வம், உட்பட பல் வேறு விஷயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார் அதில் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனை, பார்வதியம்மாள், இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் இவை தொடர்பாக அவர் பேசும் போது,

இலங்கைத் தமிழர்: இலங்கைத் தமிழர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும், அங்குள்ள தமிழர்கள் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும், பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரிய விருப்பமாகும். இலங்கை அந்நிய நாடு என்பதால்தான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்னைகளில் நாம் தலையிடும்போது, முள்மேல் விழுந்த துணியை கிழியாமல் எடுப்பது போல எடுக்க வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு மத்திய மாநில அரசுகள் செயல்படும்போது, இங்குள்ள சில அரசியல்வாதிகள் அரசியல்ரீதியான உள்நோக்கங்களோடு, தாங்கள்தான் இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்களைப் போல நடிக்கிறார்கள்.

உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்னையில், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியாத நிலை உள்ளது. இருந்தாலும் ஒரு சிலர் தங்கள் அரசியல் லாபங்களுக்காக, அவரது உடல்நிலையை வைத்து, தாங்கள் தான் அவர் மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப் போல திட்டமிட்டு எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள்: இலங்கை கடற்படையால் தாக்கப்படும் துன்பத்தைக் களைய பல ஆண்டுகளாக முடிந்த முயற்சிகளை செய்து வருகிறோம். எனினும் மீண்டும், மீண்டும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதோடு கூடவே கிரிக்கெட் தொடர்பாகவும் அரிய பல கருத்துக்களையும் தெரிவித்துள்ளார் கருணாநிதி

Exit mobile version