Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முள்ளிவாய்க்கால் புதைகுழி ஆதாரங்கள் : நிராகரிக்கும் கோத்தா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை அமெரிக்க செய்மதி ஒன்று படம்பிடித்திருந்தது.
இந்தப் படங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதைக்கப்பட்ட தற்கு ஆதாரமாக, மூன்று புதைகுழிப் பிரதேசங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர்.
இவற்றில் ஒன்றில் 1436 புதைகுழிகளும், மற்றொரு இடத்தில் 960 புதைகுழிகளும் புதிதாக தோன்றியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் அந்தப் புதைகுழிகள் காணப்படவில்லை.
இதனால், இவை போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் புதைகுழிகள் என்று அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இதனை இலங்கை அரச பயங்கரவாதி கோதாபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். மிகைப்படுத்தப்பட்ட தகவல் எனக் கூறியுள்ளார். இலங்கையில் தமக்கு வசதியான ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அமரிக்கா மீண்டும் முனைப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளதை இவ்வாறான நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

Exit mobile version