இதில் ஒன்பது(9) பிரிவுகளில் கண்ணிவெடியகற்றுவதற்காக அனுமதி தொடா்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. ஏனைய 18 கிராம அலுவலா் பிரிவுகளில் கண்ணிவெடி அகற்றும் வேலைகள் மிக மிக மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது.
முள்ளிவாயக்கால் கிழக்கு, முள்ளிவாயக்கால் மேற்கு, அம்பலவன் பொக்கணை, புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மேற்கு, மல்லிகைத்தீவு, ஆனந்தபுரம், மந்துவில், சிவநகா்
ஆகிய ஒன்பது கிராம அலுவலா் பிரிவுகளில் கண்ணிவெடி அகற்றுவதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கு இராணுவம் இன்னமும் அனுமதிக்கவில்லை.
இவற்றில் கடல்வளம் மிக்க முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, அம்பலவன்பொக்கணை ஆகிய மூன்று கிராம அலுவலா் பிரிவுகளை உள்ளடக்கிய கடற்கரை கிராமங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக அறிய முடிகின்றது. இவற்றில் அம்பலவன்பொக்களை கிராமஅலுவலா் பிரிவில்(கி.அ.பி) 12 கிராமங்களைச் சோ்ந்த 468 குடும்பங்களும், முள்ளிவாய்க்கால் மேற்கு கி.அ.பி இல் 05 கிராமங்களைச் சோ்ந்த 321 குடும்பங்களும், முள்ளிவாய்க்கால் கிழக்கு கி.அ.பி இல் 1 கிராமத்தைச் சோ்ந்த 69 குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் இன்னமும் தேடுதல் இடம்பெற்று வருவதாகவும் கண்ணிவெடி அகற்றுவதற்கான அனுமதி வழங்க இன்னும் நீண்டகாலம் செல்லும் என்றும் சாட்டுக்கள் கூறப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
அவ்வாறு தேடுதல் முடிந்து கண்ணிவெடி அகற்றுவதற்கான அனுமதி வழங்க நீண்டகாலம் செல்லும் என்றும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டாலும் கண்ணிவெடி அகற்றி முடிக்க இன்னும் அதிக காலம் எடுக்கும் என்பதனையும் சாட்டாகக் கூறிக்கொண்டு அப்பகுதி மக்களை வேறு இடத்தில் குடியமா்த்துவதற்கான மாற்று இடம் தெரிவு செய்வதற்கான முயற்சிகள் இரகசியமாக இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
இதே போன்று இன்னமும் கண்ணிவெடி அகற்ற அனுமதி அளிக்கப்படாத புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மேற்கு, மல்லிகைத்தீவு, ஆனந்தபுரம், மந்துவில், சிவநகா் ஆகிய பிரிவுகளையும் கையகப்படுத்தும் உள்நோக்கம் இராணுவத்தினரிடமும் அரசாங்கத்திடமும் இருப்பதனாலா இப்பகுதிகள் கண்ணிவெடி அகற்றுவதற்கு 22 மாதங்கள் கடந்தும் அனுமதி வழங்கப்படவில்லை என நாம் சந்தேகிக்கின்றோம்.
கரைத்துறைப்பற்று உ.அ.அ பிரிவில் 13 கிராம அலுவலா் பிரிவுகளிலும்
புதுக்குடியிருப்பு உ.அ.அ பிரிவில் 13 கிராம அலுவலா் பிரிவுகளிலும்
ஒட்டுசுட்டான் உ.அ.அ பிரிவில் 1 கிராம அலுவலா் பிரிவிலும் மக்கள் மீள் குடியமர அனுமதிகப்படவில்லை.
கண்ணிவெடி அகற்றப்படும் பிரிவுகளிலும் வேலைகள் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்படுகின்றது. இச் செயற்பாட்டில் உள்நோக்கம் இருப்பதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.
அரசின் இவ்வாறான நடவடிக்கைகளால் யுத்தத்தினால் அழிவைச் சந்தித்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சோ்ந்த 38452 போ் இன்னமும் மீள் குடியமா்த்தப்படாது மிகமோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலுள்ளனா்.
இவ்வாறு தமிழ் மக்களை சொந்த இடங்களில் குடியமரவிடாமல் தடுப்பது சா்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும், அடிப்படை மனித உரிமைகளையும் முற்றாக மீறும் செயற்பாடாகும். சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த ஐனநாயக விரோதச் செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
சிறீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்வரை தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்யும் நோக்கிலான நிலப்பறிப்பு நடவடிக்கைகளை தாமாக ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சு வார்தையில் ஈடுபடுபவா்கள் இவ்வியடத்தினை சர்வதேச சமூகத்திடம் முறைப்பாடாக கொண்டு சென்று சிறீலங்கா அரசு மீது சா்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நிலப்பறிப்புச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும்.
தேர்தல் மூலம் பாராளுமன்றம் சென்றுள்ளவர்கள் இந்த யாதார்த்தத்தை நன்கு தெரிந்து கொண்டிருந்தாலும் இவ்வியடங்கள் தொடர்பாக இன்று வரை ஐநா மனித உரிமை கவுண்சிலுக்கோ அல்லது அனைத்துலக நாட்டுத் தூதரகங்களின் கவனத்திற்கோ முறைப்பாடாகக் கொண்டு செல்ல எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஆகக் குறைந்தது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், அவர்களால் இயக்கப்படும் மனித உரிமை அமைப்புக்களுமாவது இவ்விடயம் தொடர்பாக தங்கள் நாட்டு அரசுகளது கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கைகள் கூட விடுக்கப்படவில்லை.
இதற்கு காரணம் ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பவர்களும், வார்த்தைகளில் மட்டும் தமிழ் தேசியம் பேசியவாறு எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்களும் மக்களது நலன்களை கைவிட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோகின்ற நிகழ்ச்சி…
அறிக்கையின் முழுமையைப் பார்வையிட..