ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரே நினைவு முற்றத்தைத் திறப்பதற்கு முதலீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்கா ஆகியவை நெடுஞ்சாலைத் துறை இடத்தில் இருப்பதாகக் கூறி, புதன்கிழமை காலை இடிக்கப்பட்டது. அந்த இடத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு ஒரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. பின்னர் போலீஸார் அந்த இடத்தில் இருந்து அகன்றுவிட்டனர். இதனிடையே, அந்தப் பலகையை ஒரு சிலர் இடித்து அகற்றி, கம்பிகளைப் போட்டுள்ளனர். இது குறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் 50 பேரைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டுள்ளார்.