Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொன்ற நினைவில் வெலிவெரியாவிலும் இராணுவம் சுட்டது : ரனில்

mahinda_ranilஇறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஞாபகத்தில் இராணுவத்தினர் வெலிவேரியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ருவான் விஜயரட்ன ஆகியோர் இன்று முற்பகல் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினர். காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பொதுமக்களையும் பார்வையிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் வீட்டுக்கும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் சென்று ஆறுதல் கூறினர். அங்கு நின்ற மக்களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க குழவினர் வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் செயற்பட்ட முறையை நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காண முடிந்தது என்று கூறினர்.
முள்ளிவாய்க்காலில் மக்கல் கொல்லப்படும் போது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் நடக்கிறது என்று கூறிய ரனில் இப்போதவது சிங்கள மக்களுக்கு உண்மையைக் கூறவந்திருப்பது வரவேற்பிற்குரியது. சம உரிமை, இனவாதத்திற்கு எதிரான போராட்டம், மார்க்சியம் லெனினியம் என்று பேசியவர்கள் எங்கே. வேட்டையாடப்பட்ட மக்களைச் சென்று பார்த்தார்களா?

Exit mobile version