இந்த நிலையில் சமீபத்தில் நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளதாக கூறிய கேரளா, அதுதொடர்பாக ஒரு அறிக்கையையும் இந்தக் குழுவிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து இதுகுறித்து குழுவின் உறுப்பினர்களான சி.டி.தத்தே மற்றும் மேக்தா சத்பால் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்வார்கள் என்று குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த இரு அதிகாரிகளும் இன்று நேரடியாக முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வைத் தொடங்குகின்றனர். நாளை வரை இந்த ஆய்வு நடைபெறும்.
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வை நடத்தும் இக்குழுவினர், பின்னர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம், வால்வ் ஹவுஸ், வைகை அணை உள்ளிட்டவற்றையும் பார்வையிடவுள்ளதாக கூறப்படுகிறது.