திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் பேசியதன் விவரம்:
முல்லைப் பெரியாறு பிரச்னையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆய்வின் முடிவில் அந்தக் குழு தந்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல கருத்துகள் ஒருதலைப்பட்சமானவை. கேரளம் அவற்றை ஏற்றுக் கொள்ளாது.
இப்போதுள்ள அணையின் நிலை குறித்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கருத்துகளை ஆனந்த் குழுவிடம் தமிழ்நாடு சமர்ப்பித்தது. அதிகாரம் அளிக்கப்பட்ட குழு இந்த அறிக்கையைத்தான் கருத்தில் ஏற்றுள்ளது.
அதே சமயத்தில் ரூர்க்கி ஐ.ஐ.டியும் தில்லி ஐ.ஐ.டி.யும் முல்லைப் பெரியாறு அணையில் நடத்திய சோதனைகளின் மீதான முடிவுகள் கேரளத்தின் சார்பில் அளிக்கப்பட்டன. இவற்றை நீதிபதி ஆனந்த் குழு ஏற்கவில்லை.
எனவே புதிய அணை தேவை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல கேரளம் முடிவு செய்திருக்கிறது.