போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இலங்கை அரச படைகளால் ஏவப்பட்ட குண்டர்கள் கழிவு நீர், எண்ணை, அழுக்குகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகள் கலந்துகொண்டன.
இதே போராட்டம் முடிந்து கலைந்து சென்ற பின் அதே இடத்தில் சிங்கள ரவுடிகள் அனுமதியின்றி கொச்சைதமிழில் பதாகைகளுடன் வந்து கூக்குரலிட்டு ரவடித்தனம் ஆடியபோது முல்லைத்தீவு பொலிசார் அதற்கு ஆதரவு அளித்ததுபோல் பார்த்துக்கொண்டு நின்றனர். பின்பு தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் செயலாளர் கஜேந்திரன் மற்றும் கட்சி தொண்டர்கள் மக்கள் சென்ற வாகனங்கள் அரச கைக்கூலிகளால் தொடரப்பட்டு தாக்கப்பட்டு கண்ணாடிகள் நொருக்கப்பட்டுள்ளன.