தங்களின் நம்பிக்கைக்குரிய நபர்களை மட்டுமே முல்லைத் தீவுக்குள் அனுமதித்து வருகிறது இராணுவம். ஆனால் அங்கிருந்து வெளியேறிய எந்த ஒரு பொது மக்களையும் முல்லைத்தீவிற்குள் குடியேற அனுமதி மறுத்து வருகிறது. மக்களின் நிலங்கள், உடமைகள் யாவும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது முல்லைத்தீவு. இந்நிலையில் செவ்வாய்கிழமை செய்தியார்களிடையே பேசிய இராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க முல்லைத் தீவிற்குள் பொது மக்கள் செல்ல அனுமதியில்லை. யாரேனும் செல்ல விரும்பினால் அவர்கள் இராணுவத்திடம் சிறப்பு அனுமதி பெற்றுச் செல்லலாம். என்று கூறியிருக்கிறார்.வன்னி மீதான போரின் இறுதி நாட்களில் 13,14,15,16,17.18,19, ஆகிய தேதிகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் யுத்தப் பகுதியில் இனக்கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்குப் பின்னரும் சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்கானோரை இலங்கை இராவம் கொன்று புதைத்திருக்கலாம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் வெளியாகி முல்லைத்தீவில் இப்படி கொலை செய்யப்பட்டவர்களின் மனிதப் புதைகுழிகள் இருக்கிறது என்ற தகவல்கள் கசிந்த நிலையில் அரசு மக்களை முல்லைத் தீவிற்குள் செல்ல விடாமல் தடுத்து வருகிறது