Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முல்லைத்தீவு சாகா திரைப்படத்திற்க்கு கேரளாவில் சர்வதேச விருது.

இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவானந்தபுரத்தில் நடைபெற்ற 4வது சர்வதேசத் ஆவணத் திரைப்பட விழாவில் சோமிதரன் இயக்கிய முல்லைத்தீவு சாகா திரைப்படத்திற்க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.கேரள முதலமைச்சர் உம்மான் சாண்டி இந்த விருதினை வழங்கினார்.பிரபல இயக்குனர் பிரியதர்சன் மற்றும் கேரள அமைச்சர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது. முன்னதாக ஐந்து நாட்கள் நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.இந்தியாவில் ஆவணப்படதிற்கென வருடாவருடம் வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது இந்த விருது. முல்லைத்தீவு சாகா திரைப்படம் ஈழத்தில் நடைபெற்ற இறுதியுத்தம் குறித்து 2010 ஆம் ஆண்டில் எடுக்கப் பட்டது. முல்லைத்தீவு மண்ணில் போருக்கு முன்னர் இறுதியாக நடைபெற்ற கண்ணகி கூத்துக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் இந்தப் படம் போர் விதிமுறைகளை மீறி மக்கள் கொல்லப் பட்டதையும் சிதைந்து போன மக்களின் வாழ்வையும் காட்சிப் படுத்தியிருகிறது.

இந்த ஆவணப் படத்தினை லெமுறியா பிக்சஸ் தயாரித்திருந்தது,சோமிதரன் இலங்கை குறித்து தயாரித்திருக்கும் இரண்டாவது படம் இது. இதற்க்கு முன்னர் யாழ் நூலகம் குறித்து தாயாரிக்கப்பட்ட எரியும் நினைவுகள் என்ற படம் பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதுடன் விருதுகளையும் பெற்றுள்ளது,அண்மையில் சென்னையில் இயக்குனர் ஜனநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்க்கான விருதினை இந்த திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ர இயக்குனர் வெற்றிமாறனிடமிருந்து சோமிதரன் பெற்றுக் கொண்டார். இவர் தற்போது இலங்கையின் முரண்பாட்டு வரலாற்றைச் சொல்லும் வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி என்ற இரண்டே முக்கால் மணி நேரப் படத்தினையும் இயக்கியுள்ளார்.

முல்லைத்தீவு சாகா ஆவணப்படமே ஈழத்தில் இறுதியாக நடைபெற்ற போர் குறித்து தாயரிக்கப்பட்ட முதல் படமாகும். இந்த படத்தினை திரையிடுவதற்க்கு தமிழகம் உட்பட இந்தியாவி பல இடங்களிலும் திரையிடுவதற்க்கு அச்சுறுதல் இருந்தது.சில இடங்களில் திரையிட விடாமல் தடுக்கப் பட்டது. கேரளாவில் புலிகளை மீளக் கட்டியெழுப்புவதற்க்கு இந்த படத்தின் திரையிடலுடாக முயற்சிகள் நடப்பதாக உளவுதூறை பத்திரிகளுக்கு செய்தி கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்த செய்தி கேரளப் பத்திரிகைகள் தமிழ் சிங்கள ஆங்கில ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

இந்த படம் குறித்த மேலதிக விபரத்திற்க்கு : http://mullaitivusaga.blogspot.com/

Exit mobile version