வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவிக்கின்றார்.
இந்த காணி ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கபடப்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் முதற் கட்டமாக 1000 தமிழ் இளைஞர் யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்த்தின் பின்னரே இந்த ஆட்சேர்ப்பிற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் தேவை ஏற்பட்டால் அதற்கு முன்னதாகவே பின்னனி ஆராயப்பட்டு ஆட்சேர்ப்புகள் இடம் பெறலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதே வேளை பொலிஸ் தகவல்களின் படி
கிளிநொச்சி ,முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் பிரிவு புதிதாக ஏற்படுத்தப்பட்டு அதற்கான பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் விடுவிக்கப்டப்ட பிரதேசத்தில் முழங்காவில் ,சிலாவத்துறை ,விடத்தல் தீவு ,மடு மற்றும் இலுப்பக்கடவை ஆகிய இடங்களில் 5 பொலிஸ் நிலையங்கள் திறக்கபடப்டுள்ளன. இதனைத் தவிர புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மாங்குளம் மற்றும் ஒமந்தை ஆகிய இடங்களில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்கள் திறக்கபபட்டு விட்டன.
நாச்சிக் குடா ,பூநகரி ,வெல்லான்குளம் முருகண்டி ,மல்லாவி ,கணகராயன்குளம் ,புளியன்குளம் ,முல்லைத்தீவு ,அலம்பில் ,குமணமலை ,ஒட்டிசுட்டான்,நெடுங்கேனி,புதுக்குடியிருப்பு ,கிளிநொச்சி ,ஆணையிறவு,பரந்தன்,இரனைமடு,சாலை மற்றும் கொக்காவில் உட்பட 21 பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவிருப்பதாகவுமபொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத் தகவல்களின் படி ஆரம்பத்தில் தற்காலிக ட்டிடங்களில் இவை இயங்கும் நிரந்தர கட்டிடம்அமைப்பதற்காக தலா 200 எக்கர் காணி தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள,இதனை அரசாங்கத்திடம் பெறவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.