வன்னியில் முறிகண்டிப்பகுதியில் மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இராணுவத்தினரின் குடும்பங்கள் குடியேறுவதற்கான வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பகுதியிலிருந்து வெளியேற்ற். அப்பட்ட மக்கள் தம்மை மீள்குடியேற அனுமதிக்குமாறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதுவரை உலகம் முழுவதும் நிலப்பறிப்பிற்கு எதிராகப் போராடும் கோடிக்கணக்கான மக்களோடு இணைந்து இவர்களின் போராட்டத்தை உலக மக்கள் அரங்கிற்கு எடுத்துச் செல்ல புலம் பெயர் ஐந்தாம்படை அமைப்புக்கள் முன்வரவில்லை. இராணுவக் குடியிருப்பு அடுத்தவாரம் திறந்துவைக்கப்பட உள்ளது. அமரிக்கா உட்பட ஏனைய ஏகாதிபத்திய நாடுகள் கண்துடைப்புத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிவிட்டு இலங்கை அரசோடு பேரம்பேசிக் கொள்வார்கள். மக்கள் சொந்தமண்ணில் அனாதைகள் ஆக்கப்படுகிறார்கள்.முறிகண்டியை இணைத்து புதிய சுற்றுலா மையம் ஒன்றை இலங்கை அரசு அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பல்தேசிய முதலீடுகளோடு மனித உரிமை புதைக்கப்பட்டுவிடும்.