Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முரண்பாடுகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலமே காத்திரமான தீர்வினை எட்ட முடியும்:சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் கள்மி ரே.

26.08.2008.
இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் பல்வேறு முரண்பாடுகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலமே காத்திரமான தீர்வினை எட்ட முடியும் எனச் சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் கள்மி ரே தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு இயக்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களின் போது இரண்டு தரப்புக்களினதும் கருத்துக்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள், ஹிஸ்புல்லா, கொலம்பிய விடுதலை இராணுவம் போன்ற அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே சுவிட்சர்லாந்தின் நிலைப்பாடு என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஏனைய நாடுகளைப் போன்று சுவிட்சர்லாந்து எந்தவொரு அமைப்பையும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து தூதுவர்களின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் என்பதன் மூலம் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அர்த்தப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தில் இடம்பெற்று வரும் மோதல்களுக்குத் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கும் வகையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கச் சுவிட்சர்லாந்து தயார் என க்ளெமி ரே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத்தை இல்லாதொழிக்கும் வகையில் அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒஸாமா பின் லேடனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயார் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேர்ண் நகரில் நடைபெற்ற சுவிட்சர்லாந்து தூதுவர்கள் வருடாந்த மாநாட்டில் சுமார் 170க்கும் மேற்பட்ட தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version