Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மும்பையில் பெரியார் திராவிடர் கழகம் ,கூடம்குளம் அணுமின் உலையை திறக்காதே என வலியுர்த்தி பேரணி -ஆர்பாட்டம்

மும்பையில் ரஷ்சிய செர்ணபில் அணுமின் நிலைய விபத்து நினைவுநாளையொட்டி ,மும்பை வாழ் இடிந்தகரை கிராம மக்களோடு ,பெரியார் திராவிடர் கழகம் & கொண்கன் பாசொவ் சமிதி இணைந்து ‘திறக்காதே திறக்காதே கூடம்குளம் அணுமின் உலையை திறக்காதே’ என வலியுர்த்தி பேரணி -ஆர்பாட்டம் 26/04/2012,விழாயான் கிழமை 5 மாலை மணிக்கு மும்பை தாராவி ஹோலி மைதனதிலிர்ந்து புறப்பட்டு ,தாராவி கிராஸ் ரோடு வழியாக தாராவி ஆடி வின்ஸ் ஹோட்டல் அருகே முடிவடைந்தது ,
பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரான தோழர் டாக்டர் விவேக் மண்டேரோ துவக்கவுரை நிகழ்த்தி தொடங்கிவைத்தார் ,வழியெங்கும் ‘திறக்காதே திறக்காதே கூடம்குளம் அணுமின் உலையை திறக்காதே ,’ ‘போடதே போடதே பொய்வழக்கு போடதே ‘ என முழக்கங்கள் ஹிந்தியிலும் ,தமிழிலும் விண்ணை பிளந்தது ,தாராவி கிராஸ் ரோடு காந்தி சால் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மும்பை செயலாளர் தோழர் பிரகாஷ் ரெட்டி ,மும்பை வாழ் இடிந்தகரை கிராம தோழர் ஜஸ்டின் ஆகியோர் கூடம்குளத்தில் நடக்கும் மக்கள் போராட்டத்தையும் ,கூடம்குளம் அணுமின் உலையால் வரபோகின்ற ஆபத்தையையும் விளக்கி பேசினார்கள் ,பிறகு பெரியார் சதுக்கம் அருகில் தோழர் சாயித் அன்சாரி , தோழர் பால்வண்ணன் ஆகியோர் பேசினார்கள் ,இதை தொடர்ந்து அங்கயிருந்து 90 ஆடி சாலை வின்ஸ் ஹோட்டல் அருகே பேரணி நிறவையடைந்தது இங்கு கொண்கன் பசாவ் சமிதி தோழர் அருண் விலச்கர், பெரியார் திராவிடர் கழக மும்பை பொறுப்பாளர் மா.கதிரவன் ஆகியோர் நிறைவுரை ஆற்றினார்கள் ,இப்பேரணியில் உலக தமிழர் பேரமைப்பு தோழர் நாடோடி தமிழன் ,ஆதிதமிழர் பேரவை தோழர் வி.பி.அண்ணாதுரை ,முருகேஷ் ,நாம் தமிழர் கட்சி தோழர் ஜான் கென்னடி ,அந்தேரி தமிழ் சங்க காமராஜ் ,மற்றும் இடிந்தகரை தோழர்கள் புரொட்ஸ் ,உள்பட இடிந்தகரை,ஆலந்தலை ,,கூட்டப்புளி ,மணப்பாடு கிராம மக்கள் சுமார் பேர்கள் கலந்து கொண்டனர்கள் , கூடம்குளம் அணுமின் உலைக்கு எதிராக மும்பையில் பேரணி -ஆர்பாட்டம் நடத்துவது இதுவே முதல்முறை ஆகும்

Exit mobile version