800 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொலை செய்த குற்றத்திற்காக முபாரக், உள்துறை அமைச்சர் ஹபிப் அல் அல்டி உட்பட ஆறு முக்கிய அதிகாரிகள் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததனர்.
வழக்கிற்கான ஆதாரங்கள் ஒருலட்சத்திஉ அறுபதாயிரம் பக்கங்களைக் கொண்டதாக அமைந்திருப்பதால் அவ்ற்றைப் படித்து முடிக்க நாட்கள் தேவைப்படும் என நீதிமன்றம் தெரிவிக்கிறது. 2012 ஆம் ஆண்டில் வாழ் நாள் சிறைத்தண்டனை வழங்கி முபாராக் மற்றும் அல்டிக்குத் தீர்ப்பு வழங்கியிருந்தது. பின்னர் மேன் முறையீட்டு நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இன்று முபாரக் கொள்ளையடித்த சொத்துக்களில் பல மில்லியன்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆயிரக்கணக்கில் மக்களைப் பலிகொண்ட அதே அதிகாரிகள் மீண்டும் ஆட்சியைக் கையகப்படுத்தியுள்ளனர். முபாரக் இராணுவ வைத்தியசாலையில் அனைத்து சுகபோகங்களுடனும் வாழ்க்கை நடத்துகிறார். அமெரிக்க அரசு தனது பினாமிகளை அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் புகுத்தியுள்ளது.
86 வயதான முபாரக் மத்திய கிழக்கின் முக்கிய கிரிமினல் அரசியல் தலைவர்களில் ஒருவர். பல் கொலை, கொள்ளை , சூறையாடல்களோடு தொடர்புடையவர். மேற்கு ஏகாதிபத்தியங்களின் பினாமியாகச் செயற்பட்ட முபாரக், சனியன்று நீதிமன்றத்திற்கு இராணுவ விமானத்தில் வந்திறங்கினார்.
முபாரக்கும் அவரது கூட்டுக் கொள்ளைக்காரர்களும் தண்டிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அருகிப்போயுள்ளது என எகிப்த்தின் ஜனநாயகவாதிகள் தெரிவிக்கின்றனர்.