பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஏனைய இன சமூகங்களுடன்சுபீட்சமான உறவுகளைப் பேண முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் முழுமையான நிவாரணங்களைவழங்குவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தை உரிய முறையில் நிலைநாட்டுவதன் மூலம் இன சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும்ஏற்றத் தாழ்வுகள் மற்றும் முரண்பாடுகளை முற்று முழுதாக களைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும், சமாதானமாகவும் வாழக் கூடியபின்னணியை ஜனநாயகம் உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச உடன்நிகழ்ச்சிகளில் கலந்த்துகொள்ளும் அப்துல் கலாம் இந்திய இனச் சுத்திகரிப்பிற்குத் தீர்வாக மொழி கற்றலையும் நிவாரணங்களையும் முன்வைக்கிறார்.