Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முன்னாள் கமரூச் ஆட்சியாளர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு!

comrusகமரூச் அரசாங்கத்தின் முன்னாள் தலைவரான கெயு சம்பன் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, கம்போடியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான போர்க்குற்ற நீதிமன்றத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் கூறியிருக்கிறார்.

கம்போடியாவின் வியட்நாமிய இனத்தவர்கள் மற்றும் ஷம் முஸ்லிம் சிறுபான்மையினர் ஆகியோரை கொலை செய்ததாக 78 வயதான இவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

1970 களில் கமரூச்சின் ஆட்சிக்காலத்தில் 20 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.

நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கெயு சம்பன் மீது ஏற்கனவே, போர் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.

Exit mobile version