Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதல் கோரிக்கை இராணுவமே வெளியேறு : வி.ஆனந்தசங்கரி

கிளிநொச்சியில் நடைபெற்ற  கூட்டம்  ஒன்றில்  ஆனந்த்சங்கரி உரையாற்றும் போது இதைக் குறிப்பிட்டார். நான் இப்பிரதேசத்தின் பழைய மனிதன் பல தசாப்தம் கிளிநொச்சியில வாழ்ந்தவன். எனக்கு ஞாபகம் இருக்கின்றது முன்பு தேர்தல் பிரச்சாரம் கூட்டம் முடித்துவிட்டு இரவு12மணி ஒரு மணிக்கெல்லாம் வந்திருக்கின்றோம். மிகவும் சுதந்திரமாக சென்றிருக்கின்றோம். ஆனால் இப்போது முடியவில்லை.

எத்தனை இடத்தில் இராணுவத்தால் மறிக்கப்படுகின்றோம். இந்த நிலை ஏன் இராணுவத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார். போர் தானே முடிந்து விட்டது. பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக உலகமெல்லாம் தம்பட்டம் அடித்தது அரசாங்கம். பிறகெதற்கு இராணுவத்திற்கு இங்கு அலுவல் என்னுடைய முதல் கோரிக்கை இராணுவமே வெளியேறு என்பதுதான்.

எங்கள் பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்.எங்கள் காணிகளில் எவரின் அச்சுறுத்தல் இன்றி வாழவேண்டும்.

நான் நெடுங்காலம் வாழ்ந்த கிளிநொச்சியில் என்னுடைய வாசல் தலத்தை இராணுவத்திடமிருந்து பெறுவதற்கு எவ்வளவு படாத பாடுபடவேண்டியிருந்தது என்றால் உங்களுக்கு எந்த நிலையாக இருக்கும்.

அப்பட்டமாக தாம் செய்த போர்குற்றத்தை மறுப்பதோடு மறைப்பதற்கு உங்களை பகடைக்காயாக்க திட்டம் போடுகின்றார்கள்.போரின்போது வைத்தியசாலைக்குள் எறிகணை மக்களை இராணுவம் கொன்றதை ஜனாதிபதிக்கு கடிதமாய் எழுதினேன். எப்படி மறுக்கமுடியும். மறைக்க முடியும். என்ன அபிவிருத்தி நட்க்கின்றது. வடக்கு அமைச்சர் மண்ணைக் கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதுதானே நடந்தது.

நடக்கின்றது. குடத்தனை மண்ணை தோண்டி தோண்டி தண்ணி வரப்போகின்றது. அமைச்சரின் மண்ணாசையால் அப்பாவி மக்கள் மண்ணுக்காக படாதபாடுபட வேண்டியிருக்கின்றது. கௌதாரிமுனை மண்ணை அந்த மண்ணின் சொந்தக்காரன் அனுபவிக்க முடியவில்லை. வடக்குஅமைச்சரும் எவன்எவனோ எல்லாம் திருடிப்போகின்றார்கள். இது அபிவிருத்தியின் இலட்சணமா. எஸ் எல் ஏஸ் சோதனையில் எடுபடுகின்றவர்கள் முழுதும் சிங்களவர்கள்தான். எல்லாவற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

அது தான் நாங்கள் கேட்கின்றோம் எங்களை எங்கட பாட்டில்விடப்பா எண்டு. நாங்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற தேசியத்துக்காக பாடுபடும் இயக்கம். தமிழ்கட்சி என்று கூறிக்கொண்டு அரசோடு ஒட்டிக்கொண்டு இருப்பவர் தமிழ்தேசியத்தை விற்கின்ற இயக்கம். ஆகவே இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் எமது தேசிய இயக்கத்தை பலப்படுத்தி எதிரணிக்கு தகுந்த பாடத்தை புகட்டுங்கள் என்றார்.

Exit mobile version