Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதலாளித்துவ நாடுகள் எப்போதும் சரிந்து விழலாம் : நிபுணர்கள் வாக்குமூலம்

ஜனவரி 24, ஸ்விட்சர் லாந்து டாவோசில் 40 நாடுக ளின் அரசியல் தலைவர்கள் மற்றும் 1600 நிதி மற்றும் தொழில் நிறுவன தலைவர் ளையும் சேர்த்து, 2600 பேரு டன் கூடிய 42வது உலக பொருளாதார மேடையின் அமர்வாயத்தில் கலந்து கொண் டோரின் பொதுக்கருத்து இவ் வாறாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிதி மேலாண் மையில் ஜாம்பவான் என கரு தப்படும் அமெரிக்காவின் தி கார்லைல் குரூப் நிறுவனத் தின் மேலாண் இயக்குநர் டே விட் ருபென்ஸ்டெர்ன், பர்சன் மார்ஸ்டெல்லர் நிறுவனத்தின் மார்க் பென், அமெரிக்க வங்கி யின் தலைவர் ப்ரைன் மெய்ன் ஹான், சிகாகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரகுராம் ராஜன்,கொலம்பியாவின் எரிசக்தித்துறை அமைச்சர் மௌரிசியோ கார்டனாஸ் ஆகி யோரின் பேச்சுக்களே அமர் வாயத்தின் பொதுக் கருத்துக் களை பிரதிபலித்தது.

உலகப்பொருளாதாரத்தின் மிகப்பெரிய தோல்விகளிலி ருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மேற் குலக சந்தையை காப்பாற்ற ஏதாவது உடனே செய்தாக வேண்டும். தற்போது உருவாகி யிருக்கும் பொருளாதார நெருக் கடியைச் சமாளிக்க வேண்டு மென்றால், முதலீட்டாட்சியின் புதிய வடிவங்களை சீனா வைப்போல நாம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்பார்ப்பதற்கு மாறாக, இப் பொருளாதார தேக்கநிலை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதோடு, நமது முதலீட்டாட்சியின் காலம் முடி விற்கு வர நேரிடும், மிகப்பெ ரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

இப்போது உருவாகியிருக் கும் சிக்கல் 21ம் நூற்றாண்டின் பல எதிர்கால கேள்விகளை எழுப்பியுள்ளது. இப்பிரச்ச னைகளின் தன்மையை புரிந்துகொண்டு நாம் திட்டமிட வேண்டும். உலகின் இரண்டா வது பெரிய சக்தியாக இருக்கும் சீனா, இக்காலக்கட்டத்தில் சந்தைப் பொருளாதாரத்தின் அனுகூலங்களை அறுவடை செய்துள்ளது. அமெரிக்கா வைப் போலல்லாமல், சீனச் சந்தையின் காலத்திற்கேற்ற பொருளாதார உருமாற்றம், அந் நாட்டின் பரந்துபட்ட ஜனநாயக சீர்திருத்தங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் அரசால் ஊக்குவிக்கப்பட்டு வழிகாட் டப்பட்டு வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில்கூட, அரசு முதலீட்டாட்சி சில தொழில்களில் வெற்றியடைந் துள்ளது. தி அசோசியேட் பிர ஸின் தொழில்துறை செய்தியா ளர் பான் பைலாஸ் கூறும் போது, நொறுங்கும் நிலையில் உள்ள ஐரோப்பிய பொருளாதா ரம் உலகப் பொருளாதாரத்தை யும் பாதித்ததினால், தொழில் மற்றும் அரசுத் தலைவர்களின் மீதான மக்களின் நம்பிக்கை மூழ்கிக் கொண்டிருப்பதையே, மாநாட்டில் பங்கேற்ற நிதி மற்றும் தொழில் நிறுவனங்க ளின் தலைவர்களிடம் தெளி வாக தென்பட்ட தோல்வி மனப்பான்மை காட்டியது என்று குறிப்பிட்டார்.

கோடிக்கணக்கானோர் நெருக்கடியில் வேலையிழந் திருக்கும்போது, நிறுவனங்க ளின் மேல்மட்ட நிர்வாக தலைவர்கள் மட்டும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்வது மட்டும் எப்படி என டாவோசின் மாநாட்டு அரங்கிற்கு வெளியே கூடியவர்கள் கோபாவேசத் தில் இருந்தனர்.

Exit mobile version