Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதலாளித்துவம் தீயது : அமெ.இயக்குநரின் திரைப்படம் கூறுகிறது!

“முதலாளித்துவம் : ஒரு காதல் கதை” என்பது திரைப் படத்தின் பெயர். ஆனால் இப்படத்தின் முடிவும் கருத்தும் முதலாளித்துவம் தீமையானது என்பதை வலியுறுத்துகிறது.

அமெரிக்க ஆவணத் திரைப்பட இயக்குநர் மைக் கேல் மூர் இயக்கிய இத் திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

மனித வாழ்வின் அவலங்களை நெஞ்சுருகக் கூறுவதும், கோப்புக் குறிப்பு களுடனும், தடாலடி விளம்பரத் துணுக்குகளுடனும் இப்படம் தயாரிக்கப்பட் டுள்ளது. 55 வயதான மூர் முதலாளித்துவ அமைப்பினை திரைப்படத்தில் கடு மையாகச் சாடியுள்ளார். செல்வந்தர்களுக்கு ஏராளமான பயன்களை அள்ளித் தரும் முதலாளித்துவம் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் தள்ளுகிறது என்று இப்படம் சுட்டுகிறது.

 
முதலாளித்துவம் தீயது; உங்களால் தீமையைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று இரண்டு மணி நேரம் ஓடும் இப்படம் முடிகிறது. “இதை நீங்கள் அழிக்க வேண்டும். அவ்விடத்தில் அனைவருக்கும் நன்மை புரியும் ஒன்றை வைக்க வேண்டும். அந்த ஒன்று ஜனநாயகமாகும்” என்றும் அவர் திரைப்படத்தில் கூறு கிறார்.

அமெரிக்க வங்கிகள், அரசியல்வாதிகள் மற்றும் அமெரிக்க நிதியமைச்சக அதிகாரிகளுக்கு இடையே நெருக்கமான உறவுகள் இருப்பதைப் பற்றியும் அவர் கூறுகிறார். வீதிகளில் திரியும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்குப் பதிலாக வால்ஸ்ட் ரீட் பிரமுகர்களுக்காக விதிகள் மாற்றப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

ஏழைகளைப் பாதுகாக்க முதலாளித்துவம் தவறி விட்டதால் அது கிறிஸ்த வத்துக்கு எதிரானது என்று கூறும் கிறிஸ்தவ பாதிரியார்களும் திரைப்படத்தில் இடம் பெறுகிறார்கள். “சூதாட்டம் சட்டவிரோதம் எனக் கூறும் சட்டங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், வால்ஸ்ட்ரீட்டில் சூதாட்டம் நடப்பதை நாம் அனு மதிக்கிறோம். அவர்கள் மக்கள் பணத்தை வைத்து சூதாடுகிறார்கள். ஊகச் சந்தைகளுக்கும் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்” என்று இயக்குநர் மைக்கேல் மூர் வெனிஸ் திரைப்பட விழாவில் கூடியிருந்தோரிடையே கூறினார்.

Exit mobile version