15.10.2008.
உலக நிதி நெருக்கடி உருவாக்கும் மோசமான விளைவுகள் குறித்தும், அந்நெருக்கடியைக் களைய அமெரிக்கா மேற் கொள்ளும் நடவடிக்கை கள் பற்றியும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் என்று கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ எச் சரித்துள்ளார்.
அமெரிக்க நடவடிக் கைகள் பணவீக்கத்தை அதிகரிக்கும்.
பல நாடுகளின் நாணய மதிப்பு குறைக்கப் படும். சந்தையில் வேதனை மிக்க இழப்புகள் ஏற்படும். ஏற்றுமதி பொருட்களின் விலை குறையும். சமச்சீரற்ற பரிமாற்றங்கள் உருவாகும் என்று கியூப செய்தித் தாளில் எழுதியுள்ள கட்டு ரையில் காஸ்ட்ரோ எச் சரித்துள்ளார்.
இந்நெருக்கடியின் பல னாக உண்மைகள் வெளிப் படும். போராட்ட உணர் வுகள் அதிகரிக்கும். கூடுத லான கலகங்களும் புரட் சிகளும் வெடிக்கும் என் றும் அவர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
முதலாளித்துவம் வழிகாட்டிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு முறைகளை உலகம் பின் பற்றத் தொடங்கிய பின் முதலாளித்துவ அமைப்பு சந்திக்கும் மிகப்பெரும் மோசமான நெருக்கடி என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.