தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே தொலைபேசி ஊடாகவும், மின்னஞ்சல் வழியாகவும், சமூக வலைத்தளங்களிலும் நடந்தவற்றைப் பரவலடையச் செய்த ஊடகவியலாளர்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நன்றிகள்.
ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை அரசுகளும், மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட குழுக்களும் நடத்துவது வழமை. நிழல் உலக யுத்தமாக மாறிவிட்ட தமிழ் அரசியலில் இன்று வியாபாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது. தொடர்ச்சியான சம்பவங்களை தொகுத்துப் பார்க்கும் போது இனியொரு மீதான தாக்குதல் என்பது தமிழர்களால் நடத்தப்படும் பல்தேசிய தொலைபேசி வியாபார நிறுவனம் ஒன்றைச் சார்ந்ததாகவிருக்கலாம் என சந்தேகிக்க இடமுண்டு.
இனிவரும் காலங்களில் இவ்வாறான தாக்குதல்கள் இனியொரு மீது மட்டுமன்றி ஏனைய ஊடகங்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் நடத்தப்பட வாய்ப்புக்கள் உண்டு. இவற்றை எதிர்கொள்ள மக்கள் சார்ந்த பொதுவான வேலைத்திட்டம் அவசியமானது.
இனியொரு பரபப்பையோ அனுதாபத்தையோ மூலதனமாக்கிகொள்ளாது கருத்தை உருவாக்கும் தனது பயணத்தை முன்பைப் போன்றே தொடரும். சமரசத்திற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பால் எழுத்தாளர்களதும் வாசகர்களதும் ஆதரவோடு இனியொரு தொடரும்…