Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முஜிபூர் ரஹ்மானை கொன்றவர்களை ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் பங்களாதேஷ் கோரிக்கை!

mugபங்களாதேஷின் முன்னாள் ஜனாதிபதி முஜிபூர் ரஹ்மானை கொலை செய்த நபர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு, அமெரிக்காவைக் கோரியுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து 1971ஆம் ஆண்டு வங்கதேசம் பிரிந்தது. 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இராணுவ இளம் அதிகாரிகள், வங்கதேச தலைவர் முஜிபூர் ரஹ்மானை சுட்டுக் கொன்றனர்.

இந்தக் கொலைக்கு காரணமான இராணுவ அதிகாரி சையத் பருக் ரஹ்மான் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.

வங்கதேச பிரதமராக முஜிபூர் ரஹ்மானின் புதல்வி ஷேக் ஹசீனா, தற்போது பதவியில் உள்ளார். வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் திபுமோனி, தற்போது அமெரிக்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இவர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரியைச் சந்தித்த போது, முஜிபூர் ரஹ்மானை கொன்ற நபர்களை வங்கதேசத்திடம் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Exit mobile version