Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முகாம்கள் : மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்?

6தமது விருப்பத்திற்கு மாறாக முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்கள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சொந்த நாட்டு மக்களை முகாம்களிலிருந்து 2 வாரங்களுக்கு வெளியில் சென்றுவர அனுமதித்ததை இலங்கை பெரியளவில் பிரச்சாரம் மேற்கொள்கிறது.
15 நாட்களுக்கு வெளியே சென்று திரும்புவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்களை ஆதாரமாகக் காட்டி சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

நிரந்தரமாக மக்களின் சுதந்திர இடம்நகர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமது எதிர்காலம் குறித்து இடம்பெயர் மக்கள் சுதந்திரமான தீர்மானங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சார இயந்திரங்களாகவும், அரசியல் பகடைக்காய்களாகவும் பாவிக்கப்பட்ட இந்த மக்கள் இன்று மறுபடியும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நோக்கத்திற்காகப் பாவிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இவர்கள் பாவனைகு உட்படுத்தப்படமல் குறைந்த பட்சம் தாம் எங்கு வாழ வேண்டும் என்பதைத் தாமே முடிவெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

Exit mobile version