இந்தியாவும் இதையேச் சொன்னது.
ஆனால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிந்தது. இந்நிலையில் வட பகுதியில் அமைப்பட்ட பல் வேறு முகாம்களுக்குள்ளும் மூன்று லட்சட்த்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தன.
ஆனால் முகாம்களுக்குள் இத்தனையாயிரம் மக்கள் தான் இருக்கிறார்கள் என்பதையோ அவர்களின் அரசியல் கைதிகள் இவ்வளவு பேர் என்பதையோ இலங்கை அரசு எவர் ஒருவரிடமும் தெரிவிக்கவில்லை.
ஐநா சபை உள்ளிட்ட உலக நாடுகள் இது குறித்து கேள்வி எழுப்பவும் இல்லை. இந்நிலையில் முகாம்களில் இருந்து சில பத்தயிரம் பேரை விடுவித்ததாக இலங்கை அரசு அறிவித்தது. அதிலும் முறையான எண்ணிகை இல்லை.
சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியத் தூதர் நிருபமா ராவிடம் இப்போது முகாம்களில் எழுபதாயிரம் பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது.
மீண்டும் சில நாட்கள் கழித்து இப்போது ’’ வவுனியாமாவட்டத்தில் உள்ள 6 இடங்களில் 61,898 பேரும் யாழ். மாவட்டத்தில் உள்ள இரு இடங்களில் 1,147 பேரும் வைத்தியசாலைகளில் 1,604 பேருமாக இன்னும் முகாம்களில் வாழ்கிறார்கள். 28,974 பேர் நலன்புரி நிலையங்களுக்கு வெளியே வாழ்கிறார்கள். வடக்கில் உள்ள 8 இடங்களிலும் வைத்தியசாலைகளிலுமாக 64,849 பேர் மட்டுமே இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இன்னமும் தங்கி உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
4,942 பேர் திரும்பி வருவதாகச் சொன்ன திகதிக்குள் முகாம்களுக்குள் திரும்பவில்லை என்றும் கூறினார். மகிந்த சமரசிங்கே. நிருபமா ராவிடம் சொன்ன எழுபதாயிரம் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் முகாம்களில் இருந்து சென்றவர்கள் திரும்பிவரவில்லை என்று காணாமல் போன ஐந்தாயிரம் பேருக்குக் கணக்குச் சொல்கிறது இலங்கை.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிய்மா நாகசாகியில் நடந்த மனிதப் பேரழிவிற்குப் பின்னர் மாபெரும் மனித இனக்கொலை ஒன்று யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் இலங்கையில் நடந்துள்ளது.
போர்ப்பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்தை தாண்டும் என்கிற நிலையில், முகாம்களுக்குள் பல்லாயிரம் மக்களை பாசிச பௌத்த பேரினவாத இலங்கை அரசு கொன்றொழித்திருக்க வேண்டும். புலி ஆதரவாளார்களும், ஈழ ஆதரவாளர்களும், முற்போக்கு இடது சாரிகளும் இக்கொலைகளுக்காவும் இம்மக்களுக்காகவும் என்ன செய்யப் போகிறார்கள். என்பதே நம் முன் உள்ள கேள்வி.