ஐக்கியநாடுகள் சபையின் உயர் மட்ட அரசியல் அதிகாரியான லியன் பாஸ்கோ மற்றும் மூவருடன் இலங்கை நேரப் படி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கொழும்பு புறப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அகதிகளின் மீள் குடியேற்றத்தை விரைவு படுத்துவது, மனித உரிமைகள் துஷ்பிரயோகம், அரசியல் தீர்வு காணுதல் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து நேற்று தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.
அவை தொடர்பாக விரிவாகப் பேசுவதற்கு, தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமது உயர் அரசியல் விவகார அதிகாரியான லியன் பாஸ்கோவை அனுப்பும் விருப்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக் கெண்டார்.
செயலாளர் நாயகம் இலங்கை சென்று திரும்பிய பின்னர் இலங்கையின் செயற்பாடுகள் மந்த கதியில் அமைந்திருந்தது கண்டு நாம் கவலையுற்றோம். மிகக் குறிப்பாக போர்ப் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த அகதி மக்களின் நிலை குறித்தகரிசனை கொண்டுள்ளோம். அவர்களை முகாம்களில் இருந்து வெளியேசெல்ல அனுமதிப்பது, குறிப்பாக அவர்களின் சொந்த இடங்களுக்கு (வீடுகளுக்கு) செல்ல அனுமதிப்பது குறித்து அக்கறையாக உள்ளோம்.
மனித உரிமை விடயங்கள் குறித்தும் நிறையப் பேசவேண்டி உள்ளது. (மனித உரிமைகளை பேணுவது அரசாங்கத் தினது பொறுப்பு மட்டும் அல்ல என்பதே எனது கருத்து) என்று பாஸ்கு கொழும்பு புறப்படுமுன்னர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் யுனிசெவ்வின் உயர்அதிகாரி யான ஜேம்ஸ் எல்டர் நாட்டை விட்டு வெளியேற விடுக்கப்பட்ட உத்தரவு குறித் தும் ஐ.நா. வட்டாரங்கள் பெரும் அதி ருப்தி அடைந்திருப்பதாக “ரொய்ட்டர்” செய்தியாளர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியான லியன் பாஸ்கு முன்னர் இந்தோனேஷியாவின் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர்.