இன்றைய தினம் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு,மலையக அபிவிருத்தி மற்றும் அறிவூட்டல் அமைப்பு,தனிநபர் சமூக அபிவிருத்தி கல்வி மையம் போன்ற அமைப்புகள் ஒன்றினைந்து அனர்த்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கான நினைவஞ்சலியையும்,பேரணியையும்,போராட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தன.
அத்துடன் அச்சந்தர்ப்பத்தில் மலையகத்திற்கான 5 அம்ச கோரிக்ைக பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது.
1.தேசிய வருமானத்தின் முதுகெலும்பாம் தோட்ட தொழிலாளிகளுக்கு 20 பேர்ச் காணி வீட்டுரிமையை பெற்றுக்கொடு.
2.தொடர் குடியிருப்புகளால் ஏற்படும் ஒட்டுமொத்த மின் அழிவை தடுத்து நிறுத்து.
3.தனி வீட்டு திட்டத்தின்மூலம் சுதந்திரமாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்து.
4.தோட்டப்புற மாணவர்களின் கல்விக்கு பாரிய தடையாக இருக்கும் லயன் முறைகளை முற்றாக மாற்றியமை.
5.மின்சாரம்,போக்குவரத்து மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுடன் தனி வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்து.
இவையே அப்பிரகடனங்களாகும்.
மீரியபெத்தை பேரவலம் இன்று சம்பவமாக மாற்றப்பட்டுள்ளது.அதனை மலையக மக்களின் காணி வீட்டுரிமையை வென்றெடுப்பதற்கான சரித்திரமாக மாற்ற வேண்டியது மலையகத்திலுள்ள இளைஞர்கள் தொழிலாளர்கள்,புத்திஜீவிகள் என அனைவரினதும் முதற்கடைமையாகும். எமது போராட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.