
பூடான் தலைநகர் திம்புவில் சார்க் நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக, மத்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று திம்பு செல்கிறார்.
அங்கு இலங்கை அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்ஸை எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர்.
தமிழக மீனவர்களின் கொலை இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதி எனக் கருதப்படும் நிலையில் இப் பேச்சுவார்த்தை தேர்த்தலுக்கான நாடகம் எனப் பரவலான கருத்து நிலவுகிறது.