Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீனவர் கைது : சென்னையில் உண்ணாவிரதம்!

இலங்கைக் கடற்படையினரால் கடந்த வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அகில இந்திய மீனவர் முன்னணியின் தலைவர் ஏ. மைக்கேல் அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கைக் கடற்படையினர் தமிழக கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களைக் கைது செய்தும், விசைப்படகுகளை சேதப்படுத்தியும் வருகின்றனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுப்பதில் தொடர்ந்து தாமதம் காட்டுவது கவலையளிக்கிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை 5 விசைப் படகுகளையும், 21 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

இது விடயத்தில், இந்திய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு விசைப்படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களை இன்னும் 3 நாட்களுக்குள் மீட்கவில்லையெனில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன் மாநிலம் முழுவதிலும் இருந்து மீனவ மக்களைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் எனவும் மைக்கேல் கூறியுள்ளார்

Exit mobile version