Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீனவர்கள் மீதான தாக்குதல்கள் : எச்சரிக்கை விடுக்கும் கருணாநிதி

தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலால், விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
சமீபத்தில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் கிருஷ்ணா இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்து திரும்பிய போது இனி தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். ஆனால், அவர் சொன்ன சொல்லின் ஈரம் காய்வதற்குள்ளேயே, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதே வன்னிப் படுகொலைகளும் மீனவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகமாக இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version