Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீனவர்கள் கொலை – வழக்கை நீக்கக் கோரும் இத்தாலி

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இத்தாலிய கப்பல் பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்ற விவகாரம் தொடர்பாக உயர்மட்ட தூதர் ஒருவரை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது.

கடந்தவாரம் கேரள மாநில கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் சென்ற படகை நோக்கி, அவ்வழியாக வந்த இத்தாலி சரக்கு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 இந்திய மீனவர்கள் உயிரிழந்தனர்.

கடற்கொள்ளையர்கள் என நினைத்து தாங்கள் சுட்டதாக அவர்கள் பின்னர் அதற்கு விளக்கம் அளித்தனர்.

மீனவர்கள் சுடப்பட்ட சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் நடந்துள்ளதால், இச்சம்பவம் பற்றி இந்திய போலீசார் விசாரணை நடத்துவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் இத்தாலி குடிமகன்கள். மேலும், இவர்கள் இத்தாலி நாட்டு கடற்படை வீரர்கள். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இத்தாலிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டிய நிலையிலுள்ள இந்திய மானில மத்திய அரசுகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Exit mobile version