இதனிடையே, நளினி உள்பட ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு சில தினங்களுக்கு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தடை பெற்றது. இந்நிலையில், நளினி பரோல் கேட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், நளினி உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், விடுதலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பரோல் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.