இதேவேளை,வடக்குக் கிழக்கு தமிழர்களாலேயே தான் தோல்வியடைந்ததாகவும் அடிப்படையில் தான் வெற்றியடைந்துள்ளதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார்.
நுகேகொட கூட்டம் மகிந்தவின் ஆதரவுத் தளம் இன்னும் சரிவடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மகிந்த ராஜபக்சவிற்கும் அவரது குடும்ப அரசியல் வட்டத்திற்கு எதிராகவும் இன்றைய அரசு புதிதாக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
பேச்சளவில் ஊழல்கள் தொடர்பான பிரச்சாரங்கள் ஆரம்ப நாட்களில் முன்னெடுக்கப்பட்ட போதும் குறிப்பான நடவடிக்கைகள் எதனையும் புதிய அரசு மேற்கொள்ளவில்லை. வெளிப்படையான ஊழல் குற்றச்சாட்டுக்கள், கொலைக் குற்றங்கள் போன்றவை ராஜபக்சவை அழிக்கப் போதுமானவை எனினும் புதிய அரசின் பின்னணியிலிருக்கும் ஏகபோக அரசுகள் ராஜபக்சவைப் பாதுகாக்க விரும்புகின்றன.