காணி, சட்டம் ஒழுங்கு, வட மாகாண நீர் மற்றும் உணவு விநியோகம், புனர்வாழ்வு, உள்ளுராட்சி உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்
இவ்வாறு ஜனாதிபதி மாளிகையில் குடும்பத்தின் புடைசூழ புகைப்படம் பிடித்து உலா வரவிடுவதை நல்லிணக்கம் என அழைக்கிறார்கள்.
மகிந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் மூன்று தடவைகள் சிங்கள மக்க்களின் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. பல ஊடகவியலாளர்கள், ஜனநாயகவாதிகள், மக்கள் பற்றுள்ளவர்கள் கழுத்தறுக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லீம் மக்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு ஹிட்லர்காலத்து யூத மக்களைப் போன்று தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். இலங்கையில் தற்கொலை வீதம் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் காரணமான மகிந்த அரசிற்கு வடக்கிலிருந்து நீட்டப்படும் நேசக்கரம் சிங்கள மக்களுக்கும் எதிரானது .
வடக்கிலிருந்து வெலிவேரிய மக்களுக்கும் தற்கொலைசெய்து கொள்பவர்களுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் ஆதரவான குரல்கள் எழ வேண்டும். ஜனாதிபதிக்கு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த ‘கௌரவ’ விக்கி, வெலிவேரியாவிற்கு சென்று அங்கு சத்தியப்பிரமாணம் எடுத்திருந்தால் அது நல்லிணக்கத்தின் ஆரம்பப்புள்ளியாக அமைந்திருக்கும்.