இலங்கையில் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு போலிஸ் பிரிவை பாதுகாப்பு அமைச்சிலிருந்து பிரித்தெடுக்குமாறு பரிந்துரை செய்திருந்தது.
ரனில்-மைத்திரி ஆட்சியின் கீழ் மீண்டும் போலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இல..1896/28 இன் அடிப்படையில் போலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தில் கோத்தாபயவின் நேரடி ஆணையில் இலங்கைப் போலீஸ் படை பல்வேறு கொலைகள், கடத்தல் கொள்ளை போன்றவற்றை நடத்தியது. புதிய அரசில் மீண்டும் போலிஸ் திணைக்களம் பாதுக்காப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ரனில்-மைத்திரி நவ தாராளவாத அரசில் உலக வங்கியும், நாணய நிதியமும் மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு புறத்திலும் மறுபுறத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களும் சுரண்டிக் கொழுக்க, மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அவ்வேளையில் பேரினவாதமும், போலிஸ் படையும் மக்களைக் கூறுபோட்டுக் அழிக்கும் ஆயுதங்களாகப் பயன்படும். இதற்கான முன் தயாரிப்புக்களில் ஒன்றே பாதுகாப்பு அமைச்சின் கீழ் போலிஸ் திணைக்களம் இணைக்கப்பட்டமை.