இதற்கான பொதுமக்களின் சாட்சிகளையும் வெளியிட்டுள்ள இவ்விணையம் வளம் மிக்க இப்பிரதேசங்களை இராணுவக் குடியிருப்புக்களுக்காகச் சுவிகரிக்க முனைவதாகவும் கூறுகிறது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளைப் போரின் பின்னான காலத்தில் சுவீகரித்து அங்குள்ள மக்களை அனாதைகளாக விரட்டியடித்திருக்கும் மகிந்த அரசு, கிளிநொச்சியை சிங்கள மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிரான போராட்டங்கள் பரந்துபட்ட வகையில் மேற்கொள்ளப்படாவிட்டால் தமிழ்ப் பிரதேசங்கள் பல இராணுவக் குடும்பங்களின் நிரந்தர இருப்பிடங்களாக மாறும் அபாயம் காணப்படுகிறது. இன்று எரியும் பிரச்சனைகளில் இது அவசியமாகவும் அவசரமாகவும் அணுகப்படவேண்டிய ஒன்று.