எதிர்வரும் மார்ச் மாதம் கூடும் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில், இலங்கை தொடர்பான விடயங்கள் முக்கிய இடம் வகிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் மனித உரிமை, பொறுப்புக் கூறல் மற்றும் தமிழ் சிறுபான்மை இனத்தின் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது யோசனை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், மனித உரிமை மீறல் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கு அனுமதிகளை வழங்கி, மேலதிக சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கையுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், அய்க்கிய நாடுகள் நிறுவனம், பிரித்தானியா, அமரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களும் இந்திய அரசும் நடத்தும் இந்த மனித உரிமை நாடகங்களால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
தேசிய வெறியோடு இயங்கும் புலம்பெயர் மற்றும் இந்தியக் குழுக்கள், ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள், அதீத புரட்சிக் கோசங்களுடன் உலாவும் கொள்ளைகார மாபியாக் குழுக்கள் போன்றன மக்களின் கண்ணீரில் வயிறு வளர்த்துக்கொள்வதற்காகவே உலாவருகின்றன.
இவர்களுக்குத் தீனிபோடும் ஏகாதிபத்திய அரசுகள் மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச அரசு நடத்தும் இனச் சுத்திகரிப்பை ஆதரித்து வருகின்றன.