Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீண்டும் அமரிக்காவிற்கு இலங்கை விவகாரங்களில் அக்கறை

வெள்ளை மாளிகையின் உயர் நிலை உத்தியோகத்தர்கள் நேற்று இலங்கை சென்றுள்ளனர். சமந்தா பவர், டேவிட் பிரஸ்மன் ஆகியோர் இன்று இலங்கை சென்று மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் பிரதானிகளைச் சந்தித்து உரையாடியுள்ளனர். சமந்தா பவர் பல்தரப்பு விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான ஒபாமாவின் விசேட உதவியாளராவர். டேவிட் பிரஸ்மன் போர்க்குற்ரங்கள் மற்றும் அழிவுகளுக்கான தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் இயக்குனர். இவர்கள் இருவர் தலைமையிலான குழு சில நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளுக்கும் கொழும்பிலும் பல முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளன்ர்.ஒன்றியம் போன்றனவும் முயன்று வருகின்றன.

அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, யுத்தத்தின் பின்னரான இலங்கை நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர்க் குற்றங்களையும், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளையும் தண்டனைக்கு உட்படுத்துவதற்கு மாறாக அவற்றைப் பயன்படுத்தி இலங்கையின் மீதான தமது ஆதிக்கத்தை நிலைனாட்ட ஒரு புறம் சீனா இந்தியா போன்ற நாடுகளும் மறுபுறம் அமரிக்க ஐரோப்பிய

உலகம் முழுவதும் மக்கள் இவ்வலரசுகளின் அதிகாரப் போட்டிக்கு எதிராக விழிப்படைந்து வரும் நிலையில் தன்னார்வ நிறுவனங்கள் பல போலி நம்பிக்கைகளை வழங்கி மக்களைத் திசை திருப்பும் நோக்கத்தில் ஈடுபட்டுவருகின்ற என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version