Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

     ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச  தோல்வியடைந்த பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, மகிந்த ராஜபக்ச விற்கு ஆதரவானவர்களைக் கட்சியிலிருந்து விரட்விட்டு கட்சியின் சிரேட்ட தலைவர்களுக்கு மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முனைப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

அவர் கடந்த சில தினங்களாக மத்திய செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின்படி மத்திய செயற்குழுவின் மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு கட்சியின் பொதுச் செயலாளருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்தால், செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் கடமைப்பட்டுள்ளார்.

இதன்படி, தேவையான கையெழுத்துக்களை முன்னாள் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் வெளிநாடு சென்றுள்ள அவர் நாடு திரும்பியவுடன் இதுகுறித்த முன் நடவடிக்கைகளை செயற்படுத்தத் தீர்மானித்திருப்பதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இந்த நிலைமையில், தனக்கு ஆதரவு வழங்கிவரும் எவரையும் கட்சியிலிருந்து விலகவேண்டாம் எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கட்சிக்குள் இருந்தவாரே ராஜபக்~வினரின் ஏகாதிபத்தியத்திற்கெதிராக போராடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

யசோதா குமாரதுங்க அண்மையில் தனது இரண்டாவது பிள்ளையைப் பெற்றெடுத்துள்ளார்.

தனது மகளையும், மருமகனையும் பேரப்பிள்ளைகளையும் காண்பதற்காக லண்டன் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி இன்னும் சில தினங்களில் நாடு திரும்பவுள்ளார்.

Exit mobile version