Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீட்கப்பட்ட பகுதியில் இன விகிதாசாரப்படி குடியேற்றங்களை மேற்கொள்ளவேண்டும்: மேதானந்த தேரர்.

09.04.2009.

பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் புதுக்குடியிருப்பு பகுதியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த ஹெல உறுமய எம்.பி எல்லாவெல மேதானந்த தேரர், முல்லைத்தீவின் பல பகுதிகளில் பௌத்த தொல்பொருட்கள் உள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

படையினரால் மீட்கப்பட்ட நிலங்கள் இன்று சில சக்திகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. பௌத்த தேசிய மரபுரிமைகள் இப்பகுதியிலேயே அதிகம் காணப்படுகின்றன. எனவே மீட்கப்படும் பிரதேசங்களில் இனவிகிதாசார ரீதியில் மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

புதுக்குடியிருப்பு பகுதியில் கூட சிங்கள மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்துவருகின்றனர். எனவே மீள் குடியேற்றத்தின் போது இன விகிதாசாரம் பேணப்படவேண்டும் முல்லைத்தீவில் நெடுங்கேணி, கரும்புலியங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் காணப்படும் எமது பௌத்த புராதன சின்னங்கள் வேறு எங்கும் கிடைப்பதில்லை. வடக்கு, கிழக்கை தவிர ஏனைய இடங்களில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் நடைபெறும் இந்த பௌத்த புராதன சின்ன அழிப்பில் சிங்களவரல்லாத சக்திகளே ஈடுபட்டுள்ளன.

Exit mobile version