பாலங்களின் அடியில் இடம்பிடித்துக்கொண்ட ‘குகை மனிதர்கள்’ என்று அழைக்கப்படுவோரைத் தவிர, பலர் நகரங்களில் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் வாகனங்களைத் தமது வீடுகளாக உபயோகிக்கின்றனர். மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு பாடசாலை முடிந்ததும் உறங்குவதற்கு வீடுகள் இல்லை. வரலாற்றில் முதல் தடவையாக மில்லியன் கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு மாலையில் தங்குவதற்கு வீடுகள் இல்லை எனத் கல்வித் திணக்களம் அறிக்கை விடுத்துள்ளது.
வேலையற்றோரதும் வீடற்றோரதும் தொகை நாளந்தம் அதிகரித்துச் செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கென்சாஸ் நகரத்தின் பாலங்களுக்குக் கீழே வசித்த பெருந்தொகையானோரை அமரிக்கப் போலிசார் வெளியேற்றியுள்ளனர். குப்பைகளும் அழுக்குப் படைகளுக்குமிடையில் அவர்களின் வசிப்பிடங்கள் நோய்கள் பரவக் காரணமாகலாம் என்பதே காவல் படைகள் சொல்லும் காரணம்.
தமது நாட்டில் குடிகொண்டிருக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்காக உலகம் முழுவதும் மக்கள் பணத்தில் போர் நடத்தும் அமரிக்க அரசு புதிதாக உருவாகும் வீடற்ற சமூகத்தைக் கண்டுகொள்வதில்லை.
இன்றைய நெருக்கடியைத் தோற்றுவித்தவர்களே ஐரோப்பாவிலும் அமரிக்கா முழுவதிலும் இந்த நிலை அதிகரிப்பது தவிர்க்கமுடியாதது என்கின்றனர்.